அம்மாடி.... சம்பளம் இவ்வளவு அதிகரிக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்

Thu, 26 Sep 2024-9:22 am,

2026 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. மத்திய அரசு இதற்கான பணிகளை துவங்கிவிட்டதாகவும் இன்னும் சில நாட்களின் இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். இதனால் இவர்களுக்கு மாத வருமானத்தில் நல்ல ஏற்றம் இருக்கும்.

எனினும், அரசாங்கம் இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் நிதிச் செயலர் டிவி சோமநாதன், 8வது ஊதியக்குழுக்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது என கூறியது இது குறித்த நம்பிக்கையை இன்னும் அதிகரித்துள்ளது.

ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின்மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 50% ஆக அதிகரித்தது. இதனையடுத்து 8வது ஊதியக்குழுவிற்கான கோரிக்கையும் அதிகரித்து வருகின்றது. 

வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமைக்கப்பட வேண்டும்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் உட்பட பல மத்திய அரசு அமைப்புகள் 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பத் தொடங்கியுள்ளன. 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அப்படி வரவேண்டுமானால், அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட வேண்டும்.

பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கு (Do&PT) எழுதியுள்ள கடிதத்தில், இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம், 8வது ஊதியக் குழுவை அமைக்கவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் நிதி முரண்பாடுகளைக் குறைக்கவும் தற்போதுள்ள அனைத்து முரண்பாடுகளையும் சரி செய்யவும் வலியுறுத்தியுள்ளது. இந்த கடிதத்தில் உள்ள விஷயங்கள் குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்கும் என நம்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளட்து.

தற்போதைய 7வது ஊதியக்குழு 2014ம் ஆண்டு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சுமார் 23 சதவீதம் உயர்த்தப்பட்டது. அடுத்ததாக 8வது ஊதியக்குழு வந்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற வசதிகள் மற்றும் சலுகைகளை மேம்படுத்தும் மற்றும் திருத்தும் பணிகளை செய்யும் ஊதியக்குழு இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புகிறது. இதன் பின்னர் அரசாங்கம் இதை ஆய்வு செய்து அதை அமல்படுத்துகிறது. 

7வது ஊதியக்குழு அமைக்கப்படும்போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் இருந்தன. ஆனால், அப்போது அது 2.57 மடங்காகவே நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் 8வது ஊதியக்குழுவில் கண்டிப்பாக இது 3.68 மடங்காக உயரும் என நம்பப்படுகின்றது.   8வது ஊதியக் குழு அமலுக்கு வந்து, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும், அதாவது அடிப்படை சம்பளத்தில் (Basic Salary) சுமார் 44 சதவிகித ஊதிய உயர்வு (44 Percent Salary Hike) இருக்கும்

8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது. லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் சுமார் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளம் ரூ.4.8 லட்சமாகவும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link