8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அப்டேட், அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.3,57,500 வரை உயரும்

Tue, 28 Jan 2025-8:59 am,
8th Pay Commission

2026 ஆம் ஆண்டில் 8வது ஊதியக் குழுவை (CPC) அமைப்பதற்கான முன்மொழிவை மத்திய அமைச்சரவை சமீபத்தில் அங்கீகரித்தது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழு அறிவிப்பின் மூலம் பெரும் பயனடைவார்கள்.

 

Central Government Employees

8வது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களின் கட்டமைப்பில் மாற்றங்களை செய்து, ஊதிய உயர்வை பரிந்துரைப்பதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வையும் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7th Pay Commission

தற்போது, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர். 7வது ஊதியக்குழுவின்படி, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் தோராயமாக ரூ.1,15,650 ஆகும். இருப்பினும், இதில் இனி பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். 

4வது மற்றும் 7வது ஊதியக் குழுக்களுக்கு இடையே மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.350 இலிருந்து ரூ.9000 ஆக சுமார் 2300% அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பெறும் அதிகபட்ச ஓய்வூதியம் 4வது ஊதியக்குழுவில் வெறும் ரூ.4500 ஆக இருந்தது. 7வது ஊதியக்குழுவில் இது ரூ.1.15 லட்சமாக அதிகரித்தது.

இதுவரையிலான ஊதியக்குழுக்களில், ஓய்வூதியம் எவ்வாறு உயர்ந்துள்ளது என பார்க்கலாம். 4வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஓய்வூதியம்-ரூ.375 அதிகபட்ச-ரூ.4,500 , 5வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஓய்வூதியம்-ரூ.1,275 அதிகபட்ச ஓய்வூதியம்-ரூ.15,000, 6வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஓய்வூதியம்-ரூ.3,500 அதிகபட்ச ஓய்வூதியம்-ரூ.45,000 , 7வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஓய்வூதியம்-ரூ.9,000 அதிகபட்சம் ஓய்வூதியம்-ரூ.1,15,650. 8வது ஊதியக்குழுவில், அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.3,57,500 ஆக உயரலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

6வது ஊதியக்குழுவில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியங்கள் முறையே ரூ.3500 மற்றும் ₹ரூ.45,000 ஆக அதிகரித்தது. 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியங்கள் மேலும் உயர்ந்தன. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை 2.57 மடங்கு அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனால் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500 இலிருந்து ரூ.9000 ஆக (ரூ.3500x2.57) அதிகரித்தது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.45,000 இலிருந்து ரூ.1,15,650 (ரூ.45,000x2.57) ஆக உயர்ந்தது.

பல ஆண்டுகளாக, இறந்த மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 4வது ஊதியக்குழு: குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.375, அதிகபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.1,250; 5வது ஊதியக்குழு: குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.1,275, அதிகபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.9,000; 6வது ஊதியக்குழு: குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.3,500, அதிகபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.27,000; 7வது ஊதியக்குழு: குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.9,000, அதிகபட்ச குடும்ப ஓய்வூதியம்-ரூ.69,390.

6வது ஊதியக்குழு, கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் அல்லது சராசரி ஊதியத்தில் (கடந்த 10 மாதங்களுக்கு), எது அதிக நன்மை பயக்குமோ, அதில் 50% ஓய்வூதியத்தைக் கணக்கிட பரிந்துரைத்தது. 

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்திலும் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படவுள்ளது. நிபுணர் கணிப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் 8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என தெரிகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.41,040 முதல் ரூ.51,480 வரை அதிகரிக்கக்கூடும்.

சம்பள உயர்வு: இப்போது, ​​7வது ஊதியக்குழுவிலிருந்து 8வது ஊதியக்குழுவிற்கு மாறும்போது, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000, ரூ.51,480 ஆக அதிகரிக்கலாம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டால், இது சாத்தியமாகும். இதனால், சுமார் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சிறப்பான பலனடைவார்கள். செய்திகளைப் பெறுவார்கள்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link