மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு
8வது ஊதியக் குழுவை அரசு எப்போது அமைக்கும் என்ற கேள்வி நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களின் மனதில் இருந்து வருகிறது. 8வது ஊதியக் கமிஷனை அரசு விரைவில் அமைக்கும் என்றும், இது தங்களுக்கான ஒரு பெரிய பரிசாக இருக்கும் என்றும் ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். பொதுவாகவே சம்பள திருத்தத்துடன் புதிய ஊதியக்கமிஷன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் அடிப்படை ஊதியத்தில் ஏற்றம் ஏற்படுகின்றது.
இந்த முறை ஊதியம் ஆறாவது சம்பள கமிஷனில் அதிகரிக்கப்பட்டதை விட அதிகமாக அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. எனினும் எட்டாவது ஊதியக் குழு அமைப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. எனினும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டு எட்டாவது ஊதியக்குழு கொண்டுவரப்பட்டால், அதன் செயலாக்கம் முடிந்து முழுமையாக அமலுக்கு வர இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன் படி 2026 -இல் தான் இதன் பலன்கள் ஊழியர்களுக்கு கிடைக்கத் தொடங்கும். ஆகையால் இது விரைவாக தொடங்கப்பட வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதிய அரசு அமைந்த பிறகு, 8வது ஊதியக் குழு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்காக பல ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
முன்னதாக 2014ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. பொதுவாக பத்து வருடங்களுக்கும் ஒரு முறை ஊதியக் கமிஷன்கள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு பிறகு இவை நடைமுறைக்கு வருகின்றன.
8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், 2026-ம் ஆண்டில் அது அமல்படுத்தப்படும். இதன் மூலம் ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். இது சம்பளத்தில் பம்பர் அதிகரிப்புக்கு வழிவகுக்கும், இது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 7வது ஊதியக்குழுவை விட 8வது ஊதியக்குழுவில் சம்பள ஏற்றம் அதிகமாக இருக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நான்காவது ஊதியக்குழு அமலுக்கு வந்தபோது, ஊழியர்களின் சம்பளம் 27.6 சதவீதம் அதிகரித்தது. இதற்குப் பிறகு ஐந்தாவது சம்பள கமிஷனில் 31 சதவீதம் சம்பளம் உயர்ந்தது. ஆறாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டது, அப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.86 மடங்காக வைக்கப்பட்டது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.