8வது ஊதியக்குழு: லெவல் 1 முதல் லெவல் 10 வரை.... யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு விவரம் இதோ

Thu, 30 Jan 2025-2:03 pm,
Central Government Employees

மோடி அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த குழு இன்னும் சில மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தம் குறித்த பரிந்துரைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கும்.

8th Pay Commission

8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும். ஜனவரி 1, 2026 முதல் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் செயல்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Pensioners

ஜனவரி 16 அன்று அரசாங்கத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர். ஃபிட்மென்ட் ஃபாக்டர் முடிவு செய்யப்பட்டவுடன், 1 முதல் 10 நிலைகளில் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் முழு ஊதிய மேட்ரிக்ஸும் தெரிய வரும்.

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒரு பெருக்கி (Multiplier) ஆகும். இது தற்போதைய அடிப்படை ஊதியத்தில் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் புதிய திருத்தப்பட்ட சம்பளம் கணக்கிடப்படுகின்றது. 8வது ஊதியக் குழுவின் சம்பள மேட்ரிக்ஸின் கீழ், புதிய குழு வெவ்வேறு பணி நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கான ஊதியங்களைக் கணக்கிடும்.

7வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அப்போதிருந்த ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.51,480 ஆக உயர்த்த வாய்ப்புள்ளது.

8வது ஊதியக் குழுவின் கீழ் எதிர்பார்க்கப்படும் 2.86 ஃபிட்மென்ட் ஃபாடரின் அடிப்படையில், பே மேட்ரிக்ஸின் பல்வேறு நிலைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்று இங்கே காணலாம்.

லெவல் 1 ஊழியர்கள்: பியூன்கள், உதவியாளர்கள், MTS (மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள்) அத்தியாவசிய ஆதரவுப் பணிகளைச் செய்கிறார்கள். இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும். (ரூ.33,480 உயர்வு). லெவல் 2 ஊழியர்கள்: எழுத்தர் மற்றும் வழக்கமான நிர்வாகக் கடமைகளை நிர்வகிக்கும் கீழ் பிரிவு எழுத்தர்கள் (LDCகள்). இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.19,900 -இலிருந்து ரூ.56,914 ஆக அதிகரிக்கும். (ரூ.37,014 உயர்வு). லெவல் 3 ஊழியர்கள்: காவல்துறை, பாதுகாப்பு அல்லது பொது சேவைகளில் கான்ஸ்டபிள்கள் மற்றும் திறமையான வர்த்தக ஊழியர்கள். இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.21,700 -இலிருந்து ரூ.62,062 ஆக அதிகரிக்கும். (ரூ.40,362 உயர்வு)

லெவல் 4 ஊழியர்கள்: படியெடுத்தல் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் ஸ்டெனோகிராஃபர்கள் (கிரேடு D) மற்றும் ஜூனியர் எழுத்தர்கள். இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.25,500 -இலிருந்து ரூ.72,930 ஆக அதிகரிக்கும். (ரூ.47,430 உயர்வு). லெவல் 5 ஊழியர்கள்: உயர் மட்ட நிர்வாக அல்லது தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் மூத்த எழுத்தர்கள், உதவியாளர்கள் அல்லது தொழில்நுட்ப ஊழியர்கள். இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.29,200 -இலிருந்து ரூ.83,512 ஆக அதிகரிக்கும். (ரூ.54,312 உயர்வு). லெவல் 6 ஊழியர்கள்: தொழில்நுட்ப அல்லது மேற்பார்வைப் பணிகளில் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் ஜூனியர் பொறியாளர்கள் (JE-கள்). இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.35,400 -இலிருந்து ரூ.1,01,244 ஆக அதிகரிக்கும். (ரூ.65,844 உயர்வு)

லெவல் 7 ஊழியர்கள் திட்ட மேலாண்மை அல்லது சிக்கலான நிர்வாகப் பணிகளைக் கையாளும் கண்காணிப்பாளர்கள், பிரிவு அதிகாரிகள் அல்லது உதவி பொறியாளர்கள் (AEகள்). இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.44,900 -இலிருந்து ரூ.1,28,414 ஆக அதிகரிக்கும். (ரூ.83,514 உயர்வு). லெவல் 8 ஊழியர்கள்: மூத்த பிரிவு அதிகாரிகள் அல்லது உதவி தணிக்கை அதிகாரிகள், தணிக்கைகள் அல்லது உயர் நிர்வாக செயல்பாடுகளை நிர்வகித்தல். இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.47,600 -இலிருந்து ரூ.1,36,136 ஆக அதிகரிக்கும். (ரூ.88,536 உயர்வு). லெவல் 9 ஊழியர்கள்: துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSPகள்) அல்லது கணக்கு அதிகாரிகள், செயல்பாட்டு அல்லது நிதி மேலாண்மைக்கு பொறுப்பானவர்கள். இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.53,100 -இலிருந்து ரூ.1,51,866 ஆக அதிகரிக்கும். (ரூ.98,766 உயர்வு).

லெவல் 10 ஊழியர்கள்: IAS, IPS மற்றும் IFS போன்ற சேவைகளில் உதவி ஆணையர்கள் அல்லது தொடக்க நிலை அதிகாரிகள் போன்ற குழு A அதிகாரிகள். இவர்களது அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.56,100 -இலிருந்து ரூ.1,60,446 ஆக அதிகரிக்கும். (ரூ.1,04,346 உயர்வு).

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link