8th Pay Commission: 18 ஆயிரம் சம்பளம் வாங்கினால், இனி 26 ஆயிரம் - எப்படி தெரியுமா?
ஃபிட்மென்ட் ஃபேக்டர்: 8ஆவது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்கப் போகிறது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மத்திய ஊழியர்களின் ஊதியம், 44 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், ஃபிட்மென்ட் ஃபேக்டரை தவிர வேறு எந்த முறையிலும் சம்பளத்தை மதிப்பாய்வு செய்யலாம். பழைய 7ஆவது ஊதியக்குழுவை விட புதிய ஆணையத்தில் நிறைய மாற்றங்கள் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் மூலம்தான் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தொகை மாற்றியமைக்கப்படுகிறது.
சம்பளம் கணக்கீடு: 7ஆவது ஊதியக்குழுவின் கீழ், தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக உள்ளதால், இந்த சம்பளத்திற்கான ஃபிட்மென்ட் ஃபேக்டரை அரசு அமல்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் நிறைய எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய சில புதிய முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று நம்பினார், இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தின் அடிப்படையில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம் ஊதியம் கணக்கிடப்படுகிறது.
ஃபிட்மென்ட் ஃபேக்டர் உயர்வு: ஏழாவது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 மடங்கு இருந்தது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த அதிகரிப்பு காரணமாக, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில், 8ஆவது ஊதியக் குழுவின் கீழ், இந்த முறை ஃபிட்மென்ட் ஃபேக்டர் 3.68 மடங்காக உயரலாம் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. அதே சமயம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக நேரடியாக உயர்த்தப்படலாம்.
8வது ஊதியக் குழு எப்போது?: 8வது ஊதியக் குழு தொடர்பாக மத்திய அரசால் எந்த விதமான முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை. மறுபுறம் 2024ஆம் ஆண்டில், அரசு 8ஆவது ஊதியக் குழுவை முன்மொழிந்து, 2026ஆம் ஆண்டில் அதை நடைமுறைப்படுத்தலாம். 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் ஊழியர்களுக்கு விரைவில் அரசு ஒரு பெரிய பரிசை வழங்க வாய்ப்புள்ளது.