8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?

Wed, 20 Nov 2024-9:08 am,

மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்களில் ஒரு சில மகிழ்ச்சிகரமான செய்திகள் வரவுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம். இது குறித்த முக்கிய அப்டேட் ஒன்று விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இது குறித்து பல விதமான கணிப்புகள் உள்ளன. பட்ஜெட் 2025 -இல் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.

அந்த வகையில் 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரவேண்டும். இப்பொழுது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் தான் அது சாத்தியப்படும்.

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். குறிப்பாக ஊழியர்களின் ஊதிய அமைப்பில் மாற்றம் செய்யப்படும்.

அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியான ஃபிட்மெண்ட் ஃபேக்டர் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து பல ஊகங்கள் உள்ளன. தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஃபிட்மெம்ட் ஃபேக்டர் 2.57 ஆக உள்ளது.

சமீபத்தில், கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய செயலாளர் (NC-JCM) செயலாளர், ஷிவ் கோபால் மிஸ்ரா, ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். பணவீக்கம் காரணமாக இது முக்கியமானதாக கூறப்படுகிறது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைப் புதுப்பிக்கப் பயன்படும் பெருக்கி ஆகும். 

சம்பள உயர்வு: 7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், குறைந்தபட்ச அடிபடை சம்பளம் (Basic Salary) ரூ.7,000 லிருந்து ரூ.17,990 ஆக உயர்ந்தது. 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.86 ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.68 ஆக்கப்பட்டால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,451 ஆக உயரும். 

ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம் ஏற்பட்டால், ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயம் செய்யப்பட்டால், ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 -லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும்.

8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்கக் கோரி NC-JCM இரண்டு மெமோராண்டம்களை சமர்ப்பித்தது. ஜூலை 2024 இல் மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர், முதல் மெமோராண்டம் அப்போதைய மத்திய அமைச்சரவை செயலாளராக இருந்த ராஜீவ் கௌபாவிடம் வழங்கப்பட்டது. இரண்டாவது குறிப்பாணை ஆகஸ்ட் 30 அன்று கேபினட் செயலாளராக பதவியேற்ற டி.வி.சோமநாதனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் முந்தைய குறைந்தபட்ச சம்பளம் அல்லது ஓய்வூதியத் தொகையுடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பெருக்கி  கணக்கிடப்படுகிறது. ஆகையால் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றப்பட்டால் மிகப்பெரிய ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link