மத்திய அரசு ஊழியர்களுக்கு வரப்போகுது குட் நியூஸ்... இது நடந்தால் சம்பளம் டக்குனு உயரும்

Mon, 18 Nov 2024-5:39 pm,

மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் 8ஆவது ஊதிய குழு குறித்து பேச்சுக்கள் அதிகமாகியிருக்கிறது, குறிப்பாக, ஃபிட்மண்ட் ஃபேக்டர் குறித்த பேச்சுக்களும் பரந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) என்பதுதான் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மறுசீரமைப்பு செய்ய உதவும். 

 

கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் தேசிய கவுன்சிலின் (NC-JCM) செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா சமீபத்தில் கூறுகையில், ஃபிட்மென்ட் ஃபேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்,  பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதும் என்று அவர் தெரிவித்தார். 

 

ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் திருத்தப்படுவதற்கு முக்கியமான ஒன்றாகும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 17 ஆயிரத்து 990 ரூபாய் ஆக அதிகரித்தது.

 

இப்போது 8வது ஊதியக் குழு, ஃபிட்மென்ட் ஃபேக்டரை 2.86 ஆக நிர்ணயிக்க பரிந்துரைத்தது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டும்பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 17 ஆயிரத்து 990 ரூபாயில் இருந்து 51 ஆயிரத்து 451 ரூபாய் ஆக உயரும். 

பணவீக்கம் (Inflation), விலைவாசி உயர்வு மற்றும் பிற காரணங்களை கருத்தில் கொண்டு இந்த 8ஆவது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் ஃபேக்டரை அமல்படுத்துவது அவசியமானதாகக் கூறப்படுகிறது.

 

இருப்பினும், குறைந்தபட்ச சம்பளம் 34 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் வரை உயரலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இவை வதந்திகள் என்றும் அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை எனவும் ஷிவ் கோபால் மிஸ்ரா மறுப்பு தெரிவித்தார்.

 

8வது ஊதியக்குழு குறித்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. ஆனால், 2026ஆம் ஆண்டில் 8ஆவது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக மத்திய ஊழியர்களும், ஓய்வூதியக்காரர்களும் 8ஆவது ஊதியக்குழுவை அமலாவதற்கு ஆவலோடு காத்திருக்கின்றனர். எனவே, சரியான நேரத்தில் அரசு திருத்தம் செய்யுமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link