8வது ஊதியக்குழு எப்போது வரும்? 20%-35% ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. அவர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கும் நல்ல செய்தி குறித்து பல ஊகங்களும் செய்திகளும் தொடர்ந்து வந்துகோண்டிருக்கின்றன. 8வது ஊதியக்குழுவின் உருவாக்க்கம் குறித்து மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இதை குறித்த தெளிவான அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய குழுக்கள் அமல்படுத்தப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.
அந்த வகையில் 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரவேண்டும். ஊதிய குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும். அப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வந்தால்தான் 2026 ஆம் ஆண்டில் இதை அமல்படுத்த முடியும்.
இந்த அம்சத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்களும் ஊழியர் சங்கங்களும் 8வது ஊதிய குழுவிற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் இது குறித்து அரசிடம் இருந்து இன்னும் தெளிவான செய்தி எதுவும் வரவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் டிவி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் நிதிச் செயலர் டிவி சோமநாதன் 2026 ஆம் ஆண்டில் தான் எட்டாவது ஊதிய குழு வரவேண்டும் என்றும் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அரசாங்கம் இதைக் கொண்டு வரும் மனநிலையில் தான் உள்ளது நம்பிக்கை பிறந்துள்ளது.
ஒவ்வொரு முறை ஊதியக்குழுக்கள் அமல்படுத்தப்படும் போதும் ஊழியர்களின் சம்பளத்தின் அமைப்பும் கொடுப்பனவுகளின் அளவுகளும் அதிகரிகப்படுகின்றன. இதன் மூலம் ஊழியர்களின் மாத சம்பளத்திலும் (Monthoy Salary) ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் ஏற்படுகின்றது.
ஏழாவது ஊதிய குழு அமைக்கப்பட்ட போது அடிப்படை சம்பளத்தின் முக்கிய அம்சமான ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காகவே நிர்ணயிக்கப்பட்டது.
எட்டாவது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கண்டிப்பாக 3.68 மடங்காக உயரும் என்று நம்பப்படுகிறது. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (Basic Salary) 18,000 ரூபாயிலிருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும், அதாவது அடிப்படை சம்பளத்தில் (Basic Salary) சுமார் 44 சதவிகித ஊதிய உயர்வு (44 Percent Salary Hike) இருக்கும்.
ஊதிய உயர்வு: 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது. லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் சுமார் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளம் ரூ.4.8 லட்சமாகவும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற வசதிகள் மற்றும் சலுகைகளை மேம்படுத்தும் மற்றும் திருத்தும் பணிகளை செய்யும் ஊதியக்குழு இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புகிறது. இதன் பின்னர் அரசாங்கம் இதை ஆய்வு செய்து அதை அமல்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.