மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் குட் நியூஸ்: 186% ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ
இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல வித நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அதில முக்கியமானது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு. இதற்காக ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இது குறித்த சமீபத்திய புதுப்பிப்பை இங்கே காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறுகின்றனர். புத்தாண்டில் மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 51,480 ரூபாயாக அதிகரிக்கலாம். இதற்கான அடிபடை என்ன? இங்கே காணலாம்.
8வது ஊதியக்குழுவை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது நடந்தால், சம்பளத்தை கணக்கிடுவதில் பயன்படுத்தப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கும். இப்படி நடந்தால் சம்பளம் தானாக அதிகமாகும். எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் 8வது ஊதியக் குழுவை அறிவித்து, அது அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சுமார் 186 சதவீதம் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்ளுக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
தற்போது 7வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. 6வது ஊதியக்குழுவில் இருந்து 7வது ஊதியக்குழுவிற்கு மாறிய போது அடிப்படை ஊதியம் 7,000 ரூபாய் உயர்த்தப்பட்டது.
சம்பள உயர்வு: இப்போது, 7வது ஊதியக்குழுவிலிருந்து 8வது ஊதியக்குழுவிற்கு மாறும்போது, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000, ரூ.51,480 ஆக அதிகரிக்கலாம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டால், இது சாத்தியமாகும். இதனால், சுமார் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் புத்தாண்டின் தொடக்கத்தில் சிறப்பான செய்திகளைப் பெறுவார்கள்.
ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கும் இதனால் நல்ல பலன் கிடைக்கும். ஓய்வூதியத்தில் 186% அதிகரிப்பும் சாத்தியமாகும். தற்போது ரூ.9,000 ஆக உள்ள ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம். ஆனால், இதுவரை அரசு தரப்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
8வது ஊதியக் குழுவைப் பொறுத்தவரை, கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் (NC-JCM) ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 இல் தனது கோரிக்கையை அளித்துள்ளது. டிசம்பரில் இது குறித்து ஒரு கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு இதற்கான தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. இதில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
இப்போது அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அதனால், மத்திய அரசின் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க இந்த வருவாய் உயர்வு அவர்களுக்கு உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.