8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு பெரிய செய்தி. ஊதிய உயர்வு கோரி நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது 8வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இந்த கமிஷன் அமலுக்கு வருவதால், அடிப்படை சம்பள உயர்வு மட்டுமின்றி, மற்ற படிகளும் உயரும்.
10 வருடங்களுக்கு ஒரு முறை புதிய ஊதியக் குழுவை அரசாங்கம் அமைக்கிறது. இது ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பிற வசதிகளை மதிப்பாய்வு செய்கிறது. முன்னதாக, 2014ல் அமைக்கப்பட்ட 7வது ஊதியக்குழு 2016ல் அமல்படுத்தப்பட்டது. இப்போது 8வது ஊதியக்குழுவை அமப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ஆணையம் அமைப்பது குறித்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால், அதை நடைமுறைப்படுத்த 18 முதல் 24 மாதங்கள் ஆகலாம். மதிப்பீடுகளின்படி, இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமல்படுத்தப்படலாம். அரசு ஊழியர் அமைப்புகளும், ஓய்வூதியதாரர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்தி, பொருளாதார நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தக் கமிஷனை நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
8வது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளத்தில் பெரிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Salary) ரூ.18,000 -இலிருந்து ரூ.34,560 ஆக உயரக்கூடும். இது சுமார் 52% அதிகரிக்கும். உயர் பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் மாதத்திற்கு ரூ.4,80,000 ஆக அதிகரிக்கலாம. இது தற்போதைய ரூ.2.5 லட்சத்தை விட 92% அதிகமாகும்.
8வது ஊதியக்குழு அமலாக்கத்தால் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பயன்பெற வாய்ப்புள்ளது. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு பிறகு இது ரூ.17,280 ஆக அதிகரிக்கலாம். அதேபோல், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 -இலிருந்து ரூ.2,40,000 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) புதிய விகிதத்தில் நிர்ணயிக்கப்படும் எண்ணாகும். தற்போதைய ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.62 ஆக உள்ளது. இது 8வது சம்பள கமிஷனில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 ஆக அதிகரித்தால், அனைத்து ஊழியர்களின் சம்பளத்திலும் 15-20% கூடுதல் முன்னேற்றத்தைக் காணலாம்.
சம்பள உயர்வு: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடி பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக, லெவல் 1 முதல் லெவல் 18 வரையிலான ஊழியர்களின் சம்பளம் முன்பை விட அதிகமாக இருக்கும். இந்த சம்பள உயர்வு ஊழியர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும்.
8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது இந்தியப் பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் போது, அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும், இது சந்தையில் தேவையை அதிகரிக்கும். இது சந்தைக்கு புதிய ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் உத்வேகம் அளிக்கும். சம்பள உயர்வு மூலம் பொருளாதார சீர்திருத்தத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, நவம்பரில் கூட்டு ஆலோசனை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் 8வது ஊதியக் குழு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஊழியர்களின் சேவை நிலைமைகள் குறித்து பரிசீலிக்கும் நோக்கத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் செயலாளர் தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், ஊழியர் சங்கங்களின் ஊதியக் கமிஷன் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும்.
8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. அரசாங்கம் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதை அரிவித்து 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தினால், அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் பொருளாதாரப் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பு ஊழியர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து இந்திய பொருளாதாரத்தையும் உயர்த்தும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.