8th Pay Commission: முக்கிய அப்டேட்.... விஷயத்தை போட்டுடைத்த நிதிச் செயலாளர்

Sun, 03 Dec 2023-4:06 pm,

எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படுமா அமைக்கப்படாதா என்ற கேள்வி நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனதில் இருந்து வருகின்றது.

 

சுமார் 5.4 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இது குறித்த தெளிவான செய்திக்காக காத்திரிக்கிறார்கள். இந்த நிலையில், இது தொடர்பான ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத்தேர்தல்களுக்கு முன்னதாக எட்டாவது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில், தேர்தல்களுக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees), ஆயுதப்படை பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரை மகிழ்விக்கும் வகையில் ஊதியக்குழு அமைப்பதை வெவ்வேறு அரசாங்கங்கள் ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளன.

முன்னதாக, மாநில மற்றும் பொதுத் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 2013 இல் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது.

எனினும், பாஜக அத்தகைய நடவடிக்கையிலிருந்து விலகி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இது மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறையை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. 

 

8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடகக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. சம்பள திருத்தத்திற்காக ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

குறைந்த ஊதிய வரம்பில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், அதிக வரம்பில் உள்ளவர்களுக்கு ஊதிய 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய பரீசலனை செய்யப்படக்கூடும் என கூறப்படுகின்றது. ஆனால், இதில் என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link