8வது ஊதியக்குழு: 52% ஊதிய உயர்வு, குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... அறிவிப்பு எப்போது?
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரணம் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்திலும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும் என ஒரு சாராரும், 52% அதிகரிக்கும் என சிலரும், 44% அதிகரிக்கும் என ஒரு தரப்பும், 25%-34% வரை அதிகரிக்கும் என ஒரு சாராரும் கூறி வருகிறார்கள். இதில் இத்தனை மாறுபாடுகள் வர காரணம் என்ன?
இந்த ஊகங்கள் அனைத்தும் பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எண், ஊழியர்களின் லெவல், அடிப்படை ஊதியம் மற்றும் வெவ்வேறு கணக்கீடுகளை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட விகிதங்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் தரப்பிலிருந்து இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. அதற்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
அரசு அறிவிக்கும் சம்பள உயர்வு, ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் மாறுபடும். எனினும், அரசு நிர்ணயிக்கப்போகும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அனைத்து ஊழியர்களுக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இது 8வது ஊதியக்குழுவின் 1.92 ஆக மாறக்கூடும் என கூறப்படுகின்றது. ஊழியர்கள் இதை 3.68 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு 7வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டு 2026 ஆம் ஆண்டு அதை அமலுக்கு கொண்டுவந்தது. 2026 ஆம் ஆண்டுடன் அதன் பரிந்துரைகள் நிறைவடையும் நிலையில் அடுத்த ஊதியக்குழுவிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது. பட்ஜெட் இந்த அறிவிப்புக்கான சரியான நேரமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
8வது ஊதியக் குழு குறித்து விவாதிக்க கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம் நவம்பரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், ஊழியர்களின் சேவை நிபந்தனைகள் குறித்து பரிசீலித்து, தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் போது, அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும், இது சந்தையில் தேவையை அதிகரிக்கும். சம்பள உயர்வு மூலம் பொருளாதார சீர்திருத்தம் ஏற்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளம் இரண்டிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்படலாம். குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 -இலிருந்து ரூ.34,560 ஆக உயரக்கூடும் என கூறப்படுகின்றது. இது சுமார் 52% அதிகரிப்பாக இருக்கும். உயர் பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.4,80,000 ஆக அதிகரிக்கலாம். இது தற்போது ரூ.2.5 லட்சமாக உள்ளது. அந்த வகையில் இது 92% சம்பள உயர்வாக இருக்கும்.
8வது ஊதியக்குழு அமலாக்கத்தால் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பயனடைவார்கள். புதிய ஊதியக் கட்டமைப்பின் கீழ், தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியம் (Pension) ரூ. 9,000 -இலிருந்து ரூ.17,280 ஆக அதிகரிக்கலாம். அதேபோல், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 -இலிருந்து ரூ.2,40,000 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.