தாய்மார்களிடம் இருக்கும் 8 நல்ல குணங்கள்...அவர்களின் வெளித்தோற்றத்தில் காணப்படும்!
)
அனுதாபம்: அனுதாபம் என்பது தன்னுடைய உள்ளார்ந்த மனதின் அன்பையும் மற்றும் குணங்களையும் வெளிப்படுத்துவது மற்றும் பகிர்ந்து கொள்ளுதல். ஏனென்றால் தாய்மார்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய நினைக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
)
பொறுமை: வீட்டில் அதிகமான பொறுமை அம்மாக்களிடம் உள்ளது என்று கூறப்படுகிறது. தாய்மார்கள் எந்தவொரு விஷயத்தையும் பொறுமையுடன் கையாளுவார்கள். மாறாகச் சரியான நோக்கத்திட்டங்களையும் அவர்கள் முன்வைக்க முனைவார்கள். இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது என்று சொல்லப்படுகிறது.
)
நெகிழ்வுத்தன்மை: குழந்தைகளின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதல் ஆளாக இருப்பது தாய்மார்கள். தன்னுடைய பிள்ளைகளின் குணத்திற்கேற்ப நெகிழ்வுத்தன்மையைச் சிறந்த தாய் பெற்றிருப்பார்.
உரையாடல்: பொதுவாக அதிகமான வீட்டில் உரையாடல் பாசமாகப் பேசுவது தாய்மார்களாகத் தான் இருக்க முடியும். ஏனென்றால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனை உருவாகுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
இணைப்பின் முக்கியத்துவம்: தாய்மார்கள் முக்கியமான விஷயங்களுக்குப் பக்க பலமாக்க இருப்பார்கள். வீட்டில் தங்கள் பிள்ளைகளிடம் சில விஷயங்களில் கண்டிப்பாக இருப்பார்கள். மாறாக சில விஷயங்களில் ஆதரவுடன் இருப்பார்கள்.
பின்வாங்குதல்: குழந்தைகள் செய்யும் தவறான செயல்களுக்குத் தாய்மார்கள் ஒருபோதும் துணை நிற்க மாட்டார்கள், மாறாக மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள்.
தவறு-சரி: தாய்மார்கள் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை உடனடியாக ஏற்க மாட்டார்கள். ஒருபுறம் குழந்தைகள் மீது மற்றவர்கள் ஏதேனும் புகார் அளித்தாலோ அல்லது குறைகூறினாலோ தாய்மார்கள் அதற்குச் சிறந்த பதிலடிக் கொடுப்பார்கள்.
அளவில்லா பாசம்: சிறந்த தாய்மார்கள் எப்போதும் பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசத்தைக் கொடுப்பார்கள், அதேசமயத்தில் கண்டிப்புடனும் இருப்பார்கள். தன்னுடைய குழந்தைகள் செய்யும் தவறுகள் மற்றும் நல்ல விஷயங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தாய்மார்கள் சரியான முறையில் நடந்துகொள்வார்கள்.