எனது தலைமுடியே எனது அடையாளம் எனக் கூறும் 6 அடி கூந்தல் அழகி...!!
![கம்பேயின் நீண்ட கூந்தல் கம்பேயின் நீண்ட கூந்தல்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/03/09/185604-japan-girl.jpg?im=FitAndFill=(500,286))
35 வயதான ரின், தனது தலைமுடி தான் தனது அடையாளம் என்றும், அவருக்கு 20 வயதிலிருந்தே ஹேர்கட் செய்யவில்லை என்றும் கூறுகிறார்
![ரின் காம்பே நடன கலைஞரும் கூட ரின் காம்பே நடன கலைஞரும் கூட](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/03/09/185603-japan-girl-2.jpg?im=FitAndFill=(500,286))
ரின் காம்பே ஒரு மாடல் மற்றும் நடனக் கலைஞர். டெய்லி மெயிலுடன் உரையாடிய அவர், இதுபோன்ற நீண்ட முடியை பராமரிப்பது எளிதான காரியம் அல்ல என்று கூறினார்.
![ரின் அத்தகைய நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிக்கிறார் ரின் அத்தகைய நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிக்கிறார்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2021/03/09/185602-japan-girl-3.jpg?im=FitAndFill=(500,286))
கூந்தலுக்கு குங்குமப்பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட கிரீம் பயன்படுத்துவதாகவும், தலைமுடி வளர உதவும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாகவும் ரின் கூறுகிறார்.
"நான் கண்டிப்பான பெற்றோருடன் வளர்ந்தேன், நான் குழந்தையாக இருந்தபோது, பெண்கள் கால்பந்து அணியில் இருந்தேன், இதன் காரணமாக எப்போதும் கூந்தலை ஷார்ட் கட் செய்ய வேண்டிய நிலை இருந்தது" என அவர் டெய்லி ஸ்டாரிடம் கூறினார். ரின் தனது 20 வயதில் தனது பெற்றோரை மீறி, தனது தலைமுடியை வளர்க்க முடிவு செய்ததாக மேலும் கூறினார்.
சமூக ஊடகங்களில் கிட்டத்தட்ட 32.4 K eன்ற அளவில் பாலோயர்களுடன் ரின் மிகவும் பிரபலமாக உள்ளார். ரின் தனது அழகான சூப்பர் நீள முடியின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்.