சானியா மிர்சாவும் பின் தொடரும் சர்ச்சைகளும் - பிறந்தநாள் அன்று ஓர் அலசல்
10 ஆண்டுகளுக்கு முன்பாக, அவர் டென்னிஸ் போட்டியின்போது ஸ்கேர்ட் அணிந்து விளையாடுவதை கண்டித்து அவர்களுக்கு மதம் சார்ந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், சானியா உடை குறித்து பல்வேறு ஆணாதிக்க கருத்துகளும் அதிகமாக எழுந்தன.
2007ஆம் ஆண்டு, ஒரு சிறுபான்மையினர் நலத்துறை சானியா மிர்சா மீது புகார் ஒன்றை அளித்தது. அதாவது, மசூதி வளாகத்தில் நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதற்காக இந்த புகார் அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள், மத செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இவரின் படப்பிடிப்பு சம்பவத்தை கடுமையாக எதிர்த்தனர்.
2008ஆம் ஆண்டு வெளியான சானியாவின் புகைப்படம் ஒன்று சர்ச்சை கிளப்பியது. டென்னிஸ் போட்டியின்போது, இந்திய தேசிய கொடிக்கு அடுத்து இருந்த மேசை ஒன்றில் கால்நீட்டி சானியா ஓய்வெடுத்த புகைப்படம்தான் அது. சமூக செயற்பாட்டாளர் பிரகாஷ் சிங் தாக்கூர் தேசத்தின் மாண்பை அவமதித்ததாக சானியா மது வழக்கு தொடுத்தார்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடருக்கு முன்பாக, இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு உடன் சானியா மிர்சா கடும் மோதல் போக்கை கடைபிடித்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் விளையாட வேண்டும் என சானியா கோரிக்கை விடுத்தபோது, அவரை லியாண்டர் பயஸ் உடன் விளையாடும்படி டென்னிஸ் கூட்டமைப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மகன், கணவருடன் தனது 36ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் சமயத்தில் கூட, அவரது இல்லற வாழ்வு குறித்த பேச்சுகள் பொதுவெளியில் எழுந்துவருவது துரதிருஷ்டவசமானது. ஆனால், அவர் எப்போதும் போன்று அனைத்தையும் புன்னைகயுடன் கடப்பதுதான் அவரின் பிளஸ். பிறந்தநாள் வாழ்த்துகள் சானியா.