வசீகர பார்வையில் சொக்க வைக்கும் விருமாண்டி நாயகி..!
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையானவர்களில் அபிராமியும் ஒருவர். இவர் கமல்ஹாசன் ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
பிரபு உள்ளிட்ட மற்ற நடிகர்களுடனும் படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் அபிராமி சமீப நாட்களில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
கேரளத்தில் 1983ம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் திவ்யா. அமெரிக்காவில் பணிக்கு சென்று பின் சினிமாவுக்காக இந்தியா திரும்பி வந்தார் அபிராமி.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய கதாபுருசன் படத்தில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி. ஏசியாநெட்டில் கல்லூரி காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமாருக்கு வாய்ஸ்ஓவர் கொடுத்தது அபிராமிதான். இவருக்கு 41 வயது ஆனாலும் இன்னும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களைச் சுற்றி வருகின்றன.
இன்னமும் இளமையாக இவர் இருப்பதற்கு என காரணம் என ரசிகர்கள் அவரிடமே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். 41 வயதிலும் அழகாக மின்னும் கேரளத்து தேவதையாக காட்சியளிக்கிறார் அபிராமி.