வாஸ்து சாஸ்திரப்படி இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் ஆபத்து!
கள்ளிச்செடி :
வாஸ்து சாஸ்திரத்தின்படி, கள்ளிச்செடி தீய சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதிலுள்ள முட்கள் தீய ஆற்றலை கவர்ந்து கொள்கிறது, இதனால் வீட்டில் அமைதியின்மை, சண்டை போன்ற தீய நிகழ்வுகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
பருத்தி செடி :
பருத்தி செடியில் உள்ள வெண்மை நிறம் பார்ப்பதற்கு அழகாக தெரியும், ஆனால் அவை வாஸ்து சாஸ்திரத்தின்படி உங்களது வீட்டில் எதிர்மறையான ஆற்றலை கொண்டுவந்து சேர்க்கும் என்று கூறப்படுகிறது.
போன்சாய் செடி :
போன்சாய் செடிகள் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் வாஸ்துப்படி இதை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இந்த செடி எவ்வாறு வளர்ச்சி குன்றி காணப்படுகிறதோ அதேபோல வீட்டிலுள்ளவர்கள் தொழிலும் வளர்ச்சியடையாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது.
புளி :
வாஸ்துப்படி புளிய மரத்தை வீட்டின் பக்கத்திலோ அல்லது வீட்டிற்குள்ளேயோ வைக்க கூடாது. இது அதிகப்படியான எதிர்மறை ஆற்றலை உள்ளிழுத்து வீட்டின் அமைதியை குலைக்கிறது.
மருதாணி செடி :
மருதாணி செடியின் மணம் நன்றாக இருக்கும், இது தீய சக்திகளை கவர்ந்து இழுப்பதாக கூறப்படுகிறது. அதனால் வாஸ்து சாஸ்திரப்படி, இதனை வீடுகளில் வளர்க்க வேண்டாம் என்று கூறப்படுகிறது