அஜித் மகளின் பிறந்தநாள் போட்டோஸ்! ஹீரோயின் லுக்கில் இருக்கும் அனௌஷ்கா..
திரையுலகில் இருக்கும் நடிகர்களில் இருந்து, சற்று வித்தியாசப்பட்டவர் நடிகர் அஜித். ஷூட்டிங்கை தவிர வேறு எங்கும் தன்னை சுற்றி கேமரா இருப்பதை விரும்ப மாட்டார். அது மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ‘நல்ல குடும்பஸ்தன்’ என்ற பெயரும் உள்ளது.
24 வருடங்களுக்கு முன்பு தனக்கு சினிமாவில்ஜோடியாக நடித்த ஷாலினியை, ரியல் வாழ்க்கையிலும் ஜோடி ஆக்கிக்கொண்டார். இவர்களின் அன்பும் காதலும், இத்தனை வருடங்களை கடந்தும் இன்னும் பெருகிக்கொண்டே போகிறது.
அஜித், குடும்பத்திற்காக சினிமாவை விட்டுக்கொடுப்பாரே தவிர, வேறு எதற்காகவும் தனது குடும்பத்தை விட்டுக்கொடுக்காதவராக இருக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது கூட, தனது மனைவி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் ஓடோடி வந்து அவரை பார்த்தார். தனது மனைவிக்கு நல்ல கணவராக மட்டுமன்றி, குழந்தைகளுகு நல்ல தந்தையாகவும் நடந்து கொள்கிறார்.
அஜித்தின் மகள் அனோஷ்கா 2008ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தற்போது 17 வயதாகியிருக்கிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனௌஷ்கா, தனது பிறந்தநாளை தனது பெற்றோருடனும், மாமா ரிச்சர்ட் ரிஷி மற்றும் சித்தி ஷாமிலியுடனும் கொண்டாடி இருக்கிறார்.
அனௌஷ்காவை குழந்தையாக பார்த்த ரசிகர்கள், இப்போது இவர் வளர்ந்து ஹீரோயின் போல தோற்றமளிப்பதாக கூறி வருகின்றனர்.
அனௌஷ்காவுடன் அஜித்,ஷாலினி இருக்கும் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.