Aishwarya Arjun : புது மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

Mon, 17 Jun 2024-10:15 am,

பிரபல நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் மட்டும் நடிக்க, இளைய மகள் தனக்கென தனி ஃபேஷன் பிராண்டை உருவாக்கியிருக்கிறார்.

தமிழில் ஒரு படத்திலும் வேறு மொழியில் ஒரு படத்திலும் மட்டும் நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன், அதன் பிறகு திரையுலகின் பக்கம் தலை வைத்தே பார்க்கவில்லை.

திடீரென, ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் வைரலாக தொடங்கின. அதில், இவருக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. 

வெளிவந்த தகவல்கள் போலவே, உமாபதிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதில் வெகு சில உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வரும் ஜூன் 14 ஆம் தேதி ஐஸ்வர்யா-உமாபதிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இவர்களின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

சமீபத்தில் ஐஸ்வர்யா-உமாபதியின் ஹல்தி மற்றும் நலங்கு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் இருவரும் மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கும் போட்டோக்களும் மணமக்களை பெற்றோர் வாழ்த்தும் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. 

அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற உமாபதி அந்த செட்டில் ஐஸ்வர்யாவை சந்தித்த போது இருவரும் நட்பு பாராட்டியதாகவும் பின்னர் அந்த நட்பு காதலாக வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது

தற்போது, அர்ஜுனின் மகளும் தன் மருமகளுமான ஐஸ்வர்யாவிற்கு தம்பி ராமையா ஒரு கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது. அது என்ன தெரியுமா?

திருமணத்திற்கு பிறகு, எக்காரணம் கொண்டும் சினிமா பக்கம் போகக்கூடாது என ஐஸ்வர்யாவிடம் தம்பி ராமையா கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது. இதை, மறுப்பேச்சு பேசாமல் ஐஸ்வர்யாவும் ஏற்றுக்கொண்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலானாலும், இது குறித்து இவர்கள் அதிகாரப்பூர்வமாக எங்கும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐஸ்வர்யா-உமாபதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link