அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண புடவை ரகசியம்! இதில் இப்படியொரு கதையா?
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவருக்கு உமாபதி ராமையாவுடன் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது.
தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா, தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நாயகனாக இருக்கிறார். இவரும், ஐஸ்வர்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலமாகத்தான் ஐஸ்வர்யா-உமாபதி சந்தித்து கொண்டனர். நட்பாக வளர்ந்த இவர்களின் உறவு பின்னாளில் காதலாக மாறியது.
ஐஸ்வர்யா-உமாபதியின் நிச்சயதார்த்தம், அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடைப்பெற்றதை தொடர்ந்து, திருமணம் சென்னையில் நடந்தது. இதில், சில திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஐஸ்வர்யா, கட்டியிருக்கும் புடவையை ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடை வடிவமைப்பாலர் ஏகா லகானி வடிவமைத்து இருக்கிறார். இந்த புடவை குறித்த பிரத்யேக தகவல்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இது, தூய்மையான காஞ்சிவரம் பட்டு என்றும், ராமரின் முடி சூட்டு விழாவை மையமாக வைத்து இப்புடவை வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரத்தின் கோயில்களி இருக்கும் சிற்பங்களை இந்த ஆடையில் வடிவமைத்து இருக்கின்றனர்.
இதற்கு ஏதுவாக இருக்கும் ரவிக்கையில் (ப்ளவுஸ்) ஆரி வர்க் செய்யப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க சர்தோசி பிரத்யேகமான எனப்படும் எம்ராய்ட்ரி வேலையும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
புடவை மட்டுமன்றி, அணிகல்னகளிலும் அசத்தல் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் அணிந்திருந்த நெற்றிசுட்டி, கம்மல், வளையல் என அனைத்தும் பார்ப்போரை கவர்ந்து இழுத்திருக்கின்றன.