அரவிந்த் சாமியின் மகன்-மகளின் போட்டோஸ்! அப்படியே அப்பா ஜாடை.. வைரல் புகைப்படங்கள்..
![Arvind Swamy Arvind Swamy](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/26/436396-8.jpg?im=FitAndFill=(500,286))
கோலிவுட் உலகை, 90களில் கலக்கி வந்த நாயகன், அரவிந்த் ஸ்வாமி. பம்பாய், தளபதி, ரோஜா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பெரும்பாலான மணிரத்னம் படங்களில் நடித்திருக்கிறார்.
![Arvind Swamy Arvind Swamy](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/26/436395-7.jpg?im=FitAndFill=(500,286))
திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் பிரேக் எடுத்த இவர், பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கினார். அந்த தொழிலும், பல நூறு கோடி லாபம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
![Arvind Swamy Arvind Swamy](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2024/09/26/436394-6.jpg?im=FitAndFill=(500,286))
2005ஆம் ஆண்டு, அரவிந்த் சாமிக்கு ஒரு விபத்து நேர்ந்தது. இதில், அவர் முதுகுத்தண்டு அடிப்பட்டதால் 4-5 ஆண்டுகள் தனது காலை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். பின்னர், அதிலிருந்து மீண்டு வந்தார்.
அரவிந்த் சாமிக்கு கம்-பேக் ஆக அமைந்த படம், தனி ஒருவன். இந்த படத்தில் ‘சித்தார்த் அபிமன்யூ’ எனும் கதாப்பாத்திரத்தில் முதன் முதலாக வில்லனாக நடித்தார். இந்த ரோல் அப்படியே பொருந்தி போக, தொடர்ந்து ஜெயம் ரவியுடன் போகன் படத்திலும் வில்லனாக நடித்தார்.
அரவிந்த் சாமிக்கு ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.
அரவிந்த் சாமியின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம், மெய்யழகன். இதில் அவர், அருள் மொழி வர்மன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்
அரவிந்த் சாமிக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். மகள் பெயர், ஆதிரா. இவர், சமையல் கலை பட்டப்படிப்பு படித்து இப்போது செஃப் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
அரவிந்த் சாமிக்கு 24 வயது நிரம்பிய மகனும் இருக்கிறார். இவர், சண்டை பயிற்சி கற்று தேர்ந்தவர். தந்தையை போலவே, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பொருந்தியவர். அரவிந்த் சாமியின் பிள்ளைகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.