பைலட் ஆக நினைத்த நடிகர்! ஐடி கம்பெனியில் வேலை பார்த்த பெரிய ஸ்டார்..யார் இவர்?

Sat, 17 Aug 2024-1:07 pm,
Tamil Actor

ஒரு நடிகர், தான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விமானியாக வேண்டும் என்று நினைத்தாராம். இவருக்கு இப்போது 43 வயதாகிறது. அந்த நடிகர் யார் தெரியுமா? 

Arya

அந்த நடிகர் வேறு யாருமில்லை. ஆர்யாதான். 2003ஆம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமெ பட்த்தில் நடித்து அறிமுகமான இவர், சென்னையில் படித்து வளர்ந்தவர். 

Arya

நடிகர் ஆர்யா, 2005ஆம் ஆண்டில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அவரைத்தேடி ஒரு கல்லூரியின் கதை, கலாபக்காதலன் உள்ளிட்ட படங்களின் வாய்ப்பு வந்தது. இதையடுத்து, அவர் தொடர்ந்து கதாநாயகனாக சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

ஆர்யா, சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் இன்ஜினியரிங் படித்தார். அதன் பிறகு ஐடி கம்பெனியிலும் வேலை பார்த்திருக்கிறார். 

இதற்கெல்லாம் முன்னர், அவர் இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால், அந்த கனவை அவர் பின் தொடர்ந்து போகவே இல்லை. சில ஆண்டுகள் ஐடியில் வேலை பார்த்த பிறகு மாடலிங் துறையில் ஈடுபட்டாராம். 

மாடலிங் மூலமாக அவருக்கு அதிக பட வாய்ப்புகள் ஏற்பட, தொடர்ந்து சினிமாவிலேயே இருந்து தற்போது கவனம் ஈர்க்கும் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். 

ஆர்யா, 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை கரம் பிடித்தார். இவர்களுக்குள் 17 வயது வித்தியாசம் என கூறப்படுகிறது. 

ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் ஆரியானா என்ற குழந்தை இருக்கிறது. ஆர்யா, தற்போது சில படங்களில் பிசியாக கமிட் ஆகி நடித்து வருகிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link