அடேங்கப்பா.. முதல் நாளிலே 12 கோடி.. வசூல் வேட்டையில் தெறிக்க விட்ட தனுஷின் ராயன்
தனுஷின் 50வது படமான ராயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. மேலும் படத்தில் ஏ ஆர் ரகுமானின் தாறுமாறான இசை பின்னி பெடல் எடுத்துள்ளது.
படத்தின் முதல் பாதி பயங்கரமாக இருப்பதாகவும், அடுத்த பாதி கொஞ்சம் சொதப்பலாக இருப்பதாகவும் ஒரு சிலர் தங்களின் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர்.
தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே கர்ணன் திரைப்படம் தான் முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது, அந்த வகையில் தற்போது ராயன் திரைப்படமும் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் ராயன் படம் முதல் நாளே 12.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம் கர்ணன் திரைப்படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
இன்று நாளை சனி - ஞாயிறு என்பதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.