Star Trailer : கவினின் ஸ்டார் ட்ரைலரில் ‘இதை’ கவனித்தீற்களா?
கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ஸ்டார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சீரியல் நடிகராக இருந்த கவின், தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருக்கிறார். திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு, பிக் பாஸ் மேடை பெரிய வெளிச்சத்தை கொடுத்தது.
'நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவின், அடுத்து லிஃப்ட் படத்தில் நடித்தார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, தொடர்ந்து டாடா படத்திலும் நடித்து ஹிட் கொடுத்தார். அவர், அடுத்து நடித்திருக்கும் படம், ‘ஸ்டார்’.
சினிமாவில் பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைக்கும் மிடில் க்ளாஸ் இளைஞனின் கதைதான், ஸ்டார். இதன் பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்.
ஸ்டார் ட்ரைலர், தற்போது வெளியாகியுள்ள நிலையில் இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. ட்ரைலரின் காட்சிகளில் கூஸ் பம்ப்ஸ் வர வழைக்கும் வகையில் சில வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
ஸ்டார் திரைப்படத்தை, எலன் இயக்கி இருக்கிறார். இவர், ப்யார் பிரேமா காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார். இந்த கூட்டணி, ஸ்டார் படத்தில் மீண்டும் கைக்கோர்த்துள்ளது.
கவின், ஸ்டார் பட ட்ரைலரின் ஒரு காட்சியில் மொட்டை அடித்து அழுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த ஹேர் ஸ்டைல், ஃப்ரெண்ட்ஸ் படத்தின் க்ளைமேக்ஸில் விஜய் வைத்திருப்பது போல இருப்பதாக சில ரசிகர்கள் பேசி வருகின்றனர்.