கங்குவா கடந்து வந்த பாதை! ஒரு படத்திற்கு இத்தனை பிரச்சனை வரலாமா?
சூர்யாவின் 42வது படத்தின் பூஜை ஆரம்பித்த தேதி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கியது.
கங்குவா படம், 10 மொழிகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு செப்டம்பர் 9ஆம் தேதி வெளியானது.
கங்குவா படம், 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியாகும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது.
கங்குவா படத்தின் முதல் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த டீசர் வெளியானது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கங்குவா படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கங்குவா படம் முதலில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், ஜூன் 8ஆம் தேதி படம் வெளியாகும் என மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கங்குவா, கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், வேட்டையன் படம் அப்போது வெளியானதால், அதனுடன் போட்டி போடாமல் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கங்குவா படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருந்ததை தொடர்ந்து, இப்படத்தின் ரிலீஸிற்கு தடைக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஒரு வழியாக நேற்று தொகை திரும்ப செலுத்தப்பட்டவுடன் படத்திற்கு தடையில்லை என்ற அறிவிப்பு வெளியானது.
விபத்து, ரிலீஸ் தேதி தள்ளிப்போனது, உயர்நீதிமன்றத்தில் வழக்கு, தமிழகத்தில் மழை எச்சரிக்கை என அனைத்தையும் தாண்டி, இப்படம் இன்று உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படத்திற்கு மக்கள் பலர் கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.