Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..
தமிழ் திரையுலகில், சில ஆண்டுகளுக்கு முன்பு கொடிக்கட்டி பறந்த நாயகி, அமலா பால். மைனா படம் மூலம் இவரை நிறைய பேருக்கு தெரியும்.
அமலா பால், தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். குறிப்பாக, விஜய்யுடன் தலைவா படத்திலும் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.
கேரளாவில் இருந்து வந்த மலையாள நாயகிகளுக்கு எப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில், அமலா பாலிற்கும் இங்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அமலா பால், முதலில் தமிழ் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே இவர்கள் விவாகரத்து பெற, பின்பு விஜய் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். அமலா பால், கடந்த ஆண்டு தான் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமலா பால்-ஜகத் தேசாயின் திருமணம் கொச்சியில் நடந்தது. இதையடுத்து, இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு, இலாய் என்று பெயர் வைத்திருந்தனர். தற்போது முதன் முறையாக, தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் அமலா பால்.
ஓணம் பண்டிகையை ஒட்டி, தனது குடும்பத்தினருடன் புகைப்படங்களை எடுத்த அவர் அதனை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.
அமலா பாலின் குழந்தையை பார்த்த ரசிகர்கள், அம்மாவை போலவே குழந்தைக்கு முக ஜாடை இருப்பதாக கூறி வருகின்றனர்.