அம்சமான உடையில் அடக்கமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!
திரையுலகில் பாடகியாக நுழைந்து கௌதம் மேனனின் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் பாடிய ஆண்ட்ரியா 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் மூலம் நடிகையாக அவதாரமெடுத்தார்.
பின்னர் செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.அதனை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி, அவள், வட சென்னை, அரண்மனை-3 போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'புஷ்பா:தி ரைஸ் ' படத்தில் இவர் பாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி இன்றுவரை பல ரசிகர்களின் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது.
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்கள் மற்றும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது வெளிர் நிற உடையணிந்து கேஷுவலான லுக்கில் போஸ் கொடுத்து பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.