என் நாடியை சிலிர்க்க வைத்தாய்..! கேப்ரியல்லாவின் கலக்கலான க்ளிக்ஸ்!

Sat, 29 Jan 2022-4:52 pm,

கேப்ரியல்லா சார்ல்டன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தார்.  குழந்தை நட்சத்திரமான இவர் அதே சேனலில் ஒளிபரப்பான '7ம் வகுப்பு -Cபிரிவு ' தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 

 

அதனையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க 3 படத்தில் சுருதி ஹாசனின் தங்கையாக நடித்தார், பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.  மீண்டும் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றியாளரானார். 

 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிக்பாஸ் -4 ல் போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.  தற்போது 'ஈரமான ரோஜாவே' தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் பட வாய்ப்புகளுக்காக பலவிதமான போட்டாஷூட்களை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 

 

தற்போது வெளிர்நிறத்தில் one shoulder frock அணிந்து கொண்டு இவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்கள் பலரின் இதயத்தை கவர்ந்து வருகிறது.  அந்த புகைப்படத்துடன் அவர் "ஒரு ராணி தன் மேல் தூக்கி எறியப்பட்ட கற்களை வைத்து கூட ஒரு கோட்டையை கட்டிவிடுவாள்" என்கிற கேப்ஷனையும் பதிவிட்டு அனல் பறக்க செய்திருக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link