வேற லெவலில் புகைப்படங்களை வெளியிட்ட ஜான்வி கபூர்!
நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூருக்கு குறிப்பிடதக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் படமே வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா:தி கார்கில் கேர்ள்' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.