அன்பில் அவன்..! இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஆண்டனி தட்டில் இருவருக்கும் 2024 டிசம்பர் 12 இன்று கோவாவில் தன் உறவுகள் முன் அன்புகள் நிறைந்து முகத்தில் புன்னகையுடன் இனிதே திருமணம் நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படம் இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்கு முன்பு கிளாமராக இந்தி படத்தில் வருண் தவாணுடன் “ நைன் மடக்கா” பாடலில் பக்கா கிளாமராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து படங்களில் ஆரவமாக நடித்துவருகிறார். இந்தவகையில் இவர் தனது திருமணம் குறித்து வெளியில் ஏதும் பேசியதில்லை. இவ்வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா போன்ற எதிலும் திருமணம் குறித்துப் பேசியதில்லை.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றிப் பல சர்ச்சைப் பேச்சுகள் எழுவது சகஜம் என்று ரசிகர்கள் அதனைப் பெரிதாக நினைக்கவில்லை. அதுபற்றி கீர்த்தி சுரேஷும் சொன்னதில்லை.
கீர்த்தி சுரேஷ் 15 வரடமாக ஆண்டனி தட்டில் காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தன் இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்து உறுதி செய்திருந்தார்.
கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் குடும்பத்துடன் சென்று திருமணத்திற்கு அதீர்வாதம் பெற்றுத் திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து திருமணம் குறித்து பேசினார். அப்போது தனது திருமணம் கோவாவில் டிசம்பரில் திருமணம் நடைப்பெறும் என்று கூறியிருந்தார்.
கீர்த்தி சுரேஷ் குடும்ப பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து அவர்களின் குடும்ப கலாச்சார திருமண நடைமுறையில் சிறப்பாகத் திருமணம் அமோகமாக நடந்து முடிந்தது.
கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்த ஆண்டனி தட்டில் பிரபல தனியார் நிறுவனத்தைச் சொந்தமாக நடத்தி வருகிறார். கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக வளம் வருகிறார்.