திண்டுக்கல் மருத்துவமனையில் பயங்கர தீ... 6 பேர் உயிரிழப்பு - விபத்திற்கு என்ன காரணம்?

Dindigul Hospital Fire Accident: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கிருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 13, 2024, 12:37 AM IST
  • மொத்தம் 32 பேரை நாங்கள் மீட்டுள்ளோம் - தீயணைப்பு அதிகாரி
  • மீட்பு பணி முடிந்து கடைசியாகவே லிஃப்டில் இருந்த 6 பேரை மீட்டோம் - தீயணைப்பு அதிகாரி
  • அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சம்பவ இடத்தில் ஆய்வு
திண்டுக்கல் மருத்துவமனையில் பயங்கர தீ... 6 பேர் உயிரிழப்பு - விபத்திற்கு என்ன காரணம்? title=

Dindigul Hospital Fire Accident Latest News Updates: திண்டுக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (டிச. 12) இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டு பரிதவித்தனர்.

இந்த தீ விபத்தின் போது மருத்துவமனை லிஃப்ட் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக லிஃப்டில் இருந்த சிறுவன் உட்பட 6 பேர் வெளியேற முடியாததால் தீயில் கருகியும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த 6 பேர்

சிறுமி உள்ளிட்ட 6 பேர் பலி ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 பெண், 3 ஆண் மற்றும் 1 சிறுமி என 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7 பேர் என கூறப்பட்ட நிலையில், தற்போது 6 பேர் உயிரிழந்திருப்பதாக உறுதிசெய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டை சேர்ந்த மாரியம்மாள் (50), அவரது மகன் மணி முருகன் (28), தேனியைச் சார்ந்த சுருளி (50), அவரது மனைவி சுப்புலட்சுமி (45), திண்டுக்கல் என்ஜிஓ காலனியை சேர்ந்த ராஜசேகர் மற்றும் ராஜசேகரின் மகள் கோபிகா (6) உள்ளிட்ட 6 பேர் உயரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | தமிழகத்தின் 35 மாவட்டங்களில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

விபத்து ஏற்பட்டது எப்படி?

தீ விபத்தை இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் முழுமையாக அணைத்தனர். மற்றொரு லிஃப்டில் சிக்கி இருந்த 6 நபர்களை, தீயணைப்பு படை வீரர்கள் லிஃப்டின் கதவுகளை உடைத்து பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். தீ பரவியதும் மின் விநியோகம் தடைபட்டதால் லிஃப்ட் பாதியில் நின்றதன் காரணமாகவே உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியாமல் உயிரிழந்துள்ளனர் என சொல்லப்படுகிறது. மற்றொரு லிஃப்டில் காப்பற்றப்பட்ட 6 பேரும் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6 பேர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களை 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உள்பட அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனை கட்டடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு அறையாக சோதனை செய்து வருகின்றனர். மொத்தம் 32 பேரை உயிருடன் மீட்டதாக சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு அதிகாரி கணேசன் தகவல் தெரிவித்தார்.

அமைச்சர் ஐ. பெரியசாமி ஆய்வு

முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனையில் இருந்த  UPS வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 4 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையின், முதல் தளத்தில் தீ விபத்து முதலில் ஏற்பட்டுள்ளது. பின்னர் தீ மருத்துவமனை முழுவதும் பரவியிருக்கிறது. விபத்து நடந்த தனியார் மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் ஐ. பெரியசாமி, தொடர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"முதலமைச்சர் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டார். உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மருத்துவமனை தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவது உறுதிசெய்யப்படும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து அதுகுறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும், நிவாரணங்களை வழங்கும்' என்றார். பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் வருகை தந்தனர்.

மேலும் படிக்க | வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் குழந்தை மரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News