மாளவிகா மோகனனின் கட்டுடல் ரகசியம்... டக்கரான 5 பிட்னஸ் டிப்ஸ்!
நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமானார். அதை தொடர்ந்து, கன்னடா, ஹிந்தி, தமிழ் திரையுலகில் நடித்துள்ளார். தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் பேட்டை, மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி உள்ளது. தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் படங்களை விட இன்ஸ்டாகிராமில் அதிகம் பிரபலமானவர். குறிப்பாக, இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அதிக ஆர்வங்கொண்டவர். அந்த வகையில் இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க செய்யும் 5 விஷயங்களை (Malavika Mohanan Fitness Tips) இங்கு காணலாம்.
ஜிம்மில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் முன் உடலின் தசைகளை தயார் செய்யவும், ஆற்றலை ஏற்றிக்கொள்ளவும், உடலை லேசாக வைத்திருக்க உடப்பயிற்சிக்கு முன் சில சின்ன சின்ன பயிற்சிகளை செய்வதும் அவசியம்.
மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறி, பழங்கள், புரதம் என சம அளவு ஊட்டச்சத்துகளை உள்ளடக்கிய உணவுகளையே மாளவிகா மோகனன் உண்கிறார்.
இவர் அவரது படப்பிடிப்புக்கு மத்தியில் அடிக்கடி சூடான காபியை குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் இவருக்கு ஆற்றலும் கிடைக்கிறது, உடல் எடையும் பராமரிக்கலாம்.
உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வயிறை இருக்கமாக வைத்திருக்க Planks அதிகமாக செய்வார். இதனால் வயிறு தட்டையாக இருக்கும், உடலும் கட்டுக்கோப்பாக இருக்கும். இதுதான் அவர் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கான முக்கிய காரணம்.
அதேபோல் உடலுக்கும் மனதுக்கும் தினமும் யோகா மற்றும் தியானம் செய்வதையும் மாளவிகா வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இவை மாளவிகா மோகனின் தனிப்பட்ட விஷயங்கள் உங்களின் புரிதலுக்காக கொடுக்கப்பட்டது. இதனை பின்பற்றும் முன் நீங்கள் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.