30ஆவது வயதில் அடி எடுத்துவைக்கும் மலையாள மயில் மஞ்சிமா மோகன்!
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/03/11/277999-gg2.jpg?im=FitAndFill=(500,286))
நடிகை மஞ்சிமா மோகன், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், 1993ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்தார்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/03/11/277998-gg3.jpg?im=FitAndFill=(500,286))
இவர் 1998ஆம் ஆண்டு வெளியான கலியோஞ்சல் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/03/11/277997-gg.jpg?im=FitAndFill=(500,286))
தொடர்ந்து, தென்காசிப்பட்டணம், சுந்தர புருசன் உள்ளிட்ட பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார்.
இவர் நடிகையாக 2016ஆம் ஆண்டில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' என்ற பட்த்தில் அறிமுகமானார். அதில், நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து, தமிழில் 'அச்சம் என்பது மடைமயடா' சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
தேவராட்டம் படத்தில் நடித்தபோது, நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர்.
இவரை இன்ஸ்டாகிராமில் 19 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.