கண்கள் முழுவதும் காதல்..நயன்-விக்கியின் புதிய புகைப்படங்கள்!
கோலிவுட் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த சூப்பர் ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.
2015ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் படத்தில் சந்தித்துக்கொண்ட இவர்கள், நட்புடன் பழகி பின்பு காதலர்களாக மாறினர்.
விக்னேஷ் சிவன், வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், தென்னிந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருக்கிறார். தற்போது அவர் LIC எனும் படத்தை இயக்கி வருகிறார்.
விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கும் உயிர்-உலக் எனும் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு முன்னர் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, இப்போது பொறுமையாக கதைக்கேட்டு ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கே.ஜி.எஃப் நாயகன் யாஷிற்கு ஜோடியாக இவர் ‘டாக்சிக்’ படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
நயனும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி டூர் செல்வது வழக்கம். அந்த வகையில், அவர்கள் சமீபத்தில் டிஸ்னி லேண்டிற்கு சென்றனர்.
நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் lunch date சென்றிருக்கிறார். இது குறித்து அவர் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.