Nayanthara: நயன்தாராவின் போயஸ் கார்டன் இல்லம்..வைரல் போட்டோக்கள்!
தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நயன்தாரா.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிசியாக படங்களில் நடித்து வந்த இவர், தற்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
நயன்தாரா, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, அவருக்கு கன்னடத்திலும் ‘டாக்சிக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கும் நேசிப்பாயா பட விழா நடந்தது. இதில் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நயன்தாரா, சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில், அவர் ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்தார்.
இந்த வீடு, அவருடையதுதான் என கூறப்படுகிறது. த்ரிஷா, ரஜினிகாந்த் ஆகியோர் வசிக்கும் போயஸ் கார்டனில் இருக்கும் வீடு இது என தகவல் வெளியாகியிருக்கிறது.
நயன், சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த அழகு சாதன பொருட்கள் பிராண்டை ஆரம்பித்தார்.
நயன்தாராவின் வீட்டை பார்த்த ரசிகர்கள், இதற்கு லைக்ஸை குவித்து வருகின்றனர்.