நித்திரையை களைத்த நிதி அகர்வாலின் புகைப்படங்கள்!

Sun, 23 Jan 2022-6:16 pm,

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.  பின்னர் அதே வருடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

 

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.  இவர் முதன்முதலாக 2017-ல் வெளியான  'முன்னா மைகேல்' என்ற ஹிந்தி மொழி படம் மூலமாக திரைத்துறைக்குள் நுழைந்தவர்.   அதனையடுத்து 2018-ல் 'சவ்யசாசி' என்ற தெலுங்கு படத்தின் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார்.

 

மேலும்  'மிஸ்டர் மஜ்னு' மற்றும் 'ஐ ஸ்மார்ட் சங்கர்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.  'ஈஸ்வரன்' படத்தில் இவர் நடமாடிய 'செல்லக்குட்டி ராசாத்தி' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.  ஒவ்வொரு நடிகைகளும் வித விதமாக போட்டோஷூட் நடத்தி தங்களது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

 

அந்த வகையில் நிதி அகர்வால் பதிவிடும் புகைப்படங்கள் தாறுமாறாக இருக்கும்.  மாடர்ன் உடையில் சற்றே கவர்ச்சி தூக்கலாய் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் விரல்கள் அவர்களை அறியாமலேயே லைக்ஸுகளை அள்ளி வீசிவிடும்.  தற்போது இவர் மாடர்ன் உடையில், அமர்ந்துகொண்டு கொண்டு கொடுத்திருக்கும் போஸ் பார்க்கும் ரசிகர்களின் மனதை பாடாய்படுத்தி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link