Nivetha Thomas: அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்!! வைரல் போட்டோஸ்..

Sun, 01 Sep 2024-10:04 am,

தமிழில் பிரபலமாக இருக்கும் மலையாள நடிகைகளுள் இருப்பவர் நிவேதா தாமஸ். 8 வயதில் இருந்து சினிமா உலகில் இருக்கும் இவர், இப்போது கவனிக்கத்தக்க நடிகையாக விளங்கி வருகிறார். 

2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர், “மை டியர் பூதம்”. இதில், முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். 

குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த இவர், பின்னர் வளர்ந்தவுடன் ‘ஜில்லா’ படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்தார்.

தமிழில், முதன்முறையாக ‘நவீன சரஸ்வதி சபதம்’ படம் மூலமாக, இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் மூலம் அவர் பிரபலமானாலும், தமிழில் அவருக்கு நடிக்க வெகு சில வாய்ப்புகளே வந்தது. 

கமலுடன்‘பாபநாசம்’ படத்தில் நடித்த இவர், தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழில்,‘தர்பார்’ படத்திற்கு பிறகு, இவருக்கு பெரிதும் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக இவர் கோலிவுட் பக்கம் எட்டி பார்க்கவில்லை. 

தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்த இவர் ஓராண்டாக திரைத்துறையின் பக்கம் வரவே இல்லை. இதற்கான காரணமும் யாருக்கும் தெரியவில்லை. 

நிவேதா, தற்போது 35 என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திர்கான ப்ரமோஷன் பணிகள் தொடங்கியிருக்கிறது. இதில் அவர் சமீபத்தில் கலந்து கொண்டார். 

ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருக்கும் நிவேதா தாமஸை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர். ஒரு சிலர், இவரது உருவத்தை பார்த்து கமெண்ட் செய்தாலும் ஒரு சிலர் “அவரது உடல்...அவரது விருப்பம்..” என்று ஆதரவாக பேசி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link