வெயிட்டை குறைக்க பிரியாமணி செய்யும் விஷயம்! வாரத்தில் 3 முறை பண்ணா போதுமாம்..
நடிகை பிரியாமணி, பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். சில ஆண்டுகளிலேயே இந்தி திரையுலகிற்குள் சென்ற அவர் தற்போது இந்திய அளவில் பிரபலமான நாயகியாக இருக்கிறார். இவருக்கு 40 வயதாகும் நிலையில், அவர் இன்னும் தன் உடலை சிக்கென வைத்திருக்கிறார். அவர், உடல் எடையை குறைக்க என்ன செய்கிறார் தெரியுமா? இங்கு அவரது டயட் மற்றும் வெயிட் லாஸ் டிப்ஸை பார்க்கலாம்.
நடிகை பிரியாமணி, தினமும் தான் சாப்பிடும் உணவுகளை கண்காணிக்கிறார். மேலும், அதிகமாக ஆயில் உணவுகளை எடுப்பதையும் குறைத்துக்கொண்டிருக்கிறார். மேலும், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளையும் தவிர்த்துவிடுவாராம்.
சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளையும் தவிர்ப்பவர், பிரியாமணி. இதனால்தான் இவர் முகமும் இவ்வளவு பொலிவாக இருக்கிறதாம். பேக்கெட்டில் வரும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கும் இவர், வீட்டு உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வாராம்.
பிரியாமணி, தினமும் வர்க்-அவுட் செய்ய மறக்காதவராம். கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வது இவர் ஃபேவரட் என கூறப்படுகிறது.
பிரியாமணி, பழச்சாறு மற்றும் காய்கறி சாலட்டுகளையும் தனது டயட்டில் சேர்த்துக்கொள்கிறார். அதிலும், அதை அளவாக மட்டுமே வைத்துக்கொள்வாராம். சமயங்களில் உலர் பழங்கள் மற்றும் விதைகளை ஹெல்தி ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்வார் என கூறப்படுகிறது.
பிரியாமணி, வாரத்தில் மூன்று நாட்கள் யோகாசனம் செய்வாராம். இது, இவரது உடல் நளினமாக இருப்பதற்கும், கட்டுக்கோப்பாக இருப்பதற்கும் உதவுவதாக கூறப்படுகிறது.
பிரியாமணி, தனது தூக்கத்தையும் முன் நிறுத்துபவர். காலையில் சரியாக 7:30 மணிக்கு எழுந்து கொள்ளும் இவர், அதன் பிறகு தனது வேலையை பார்க்க தொடங்குவாராம். 7-8 மணி நேரம் இவரது தூக்க நேரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பிரியாமணி, இத்துடன் சேர்த்து, தினமும் தன் உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தும் இருக்குமாறு பார்த்துக்கொள்வாராம். உடல் எடையை குறைக்க நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.