சின்ன சின்ன கண் அசைவில் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராகுல் ப்ரீத் சிங்!
மாடலிங் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
2011-ல் வெளியான யுவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து தமிழில் தடையற தாக்க, புத்தகம். என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தெலுங்கானாவின் "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்" திட்டத்தின் தூதராக செயலாற்றி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது ஸ்லீவ்ல்ஸ் லெஹெங்கா அணிந்துகொண்டு பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.