ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி வசூலிக்கும் தென்னிந்திய நடிகை! யார் தெரியுமா?

Mon, 18 Nov 2024-8:05 am,

நடிப்பை தாண்டி தனது நடனம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த கதாநாயகிகள் உள்ளனர். பாலிவுட்டில் தொடங்கிய இந்த நடைமுறை, தென்னிந்தியாவிலும் பரவலாக அரங்கேறி வருகிறது.      

சமந்தா, த்ரிஷா, அஞ்சலி, தமன்னா என முன்னணி நடிகைகள் தொடங்கி இளம் நடிகை ஸ்ரீலீலா வரை பலரும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். 

 

சில நேரங்களில் இந்த பாடல்கள் தான் அந்த படங்களின் வசூலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புஷ்பா, ஜெய்லர் போன்ற படங்களின் ஓப்பனிங்கிற்கு இந்த பாடல்கள் பெரிதும் உதவியது.

 

இன்றைய காலகட்டத்தில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நடிகைகள் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் சமந்தா இவர்களை தாண்டி முன்னணியில் உள்ளார்.

 

புஷ்பா: தி ரைஸ் படத்தில் இடம்பெற்ற ஓ அன்டவா என்ற பாடலுக்கு நடனமாட சமந்தா ரூத் பிரபு ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு பாடலுக்கு நடனமாட அதிகம் சம்பளம் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை.

 

நோரா ஃபதேஹி மற்றும் சன்னி லியோன் போன்ற புகழ்பெற்ற நடிகைகள் கூட ஒரு பாடலுக்கு நடனமாட சுமார் ரூ.2 கோடி வசூலிப்பதாக கூறப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link