சமந்தா நடித்த டாப் ஹிட் தமிழ் படங்கள் மற்றும் பாடல்கள் !
2010 ஆம் ஆண்டு பாணா காத்தாடி படத்தில் சிறு வயதிலே சமந்தா சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.இதில் அதர்வா ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.இப்படம் முழுவதும் சின்ன சின்ன பசங்களை வைத்து எடுக்கப்பட்ட நல்ல பொழுதுப்போக்கான படம். ‘என் நெஞ்சில் ஒரு பூத்தனெ’ பாடல் இப்படத்தில் மிகப்பெரிய ஹிட் ஆனது.
ஜூலை 2012 ஆம் ஆண்டு நான் ஈ படத்தில் நானீ ஜோடியாக சமந்தா அழகான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இதில் ‘ஈட ஈட’கொஞ்சம் கொஞ்சம்’ பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை விரும்பிப்பார்க்கும் பொழுதுப்போக்கு படமாக அமைந்துள்ளது.
டிசம்பர் 2012 ஆம் ஆண்டு ‘நீதானே என் பொன்வசந்தம்’படத்தில் பள்ளி பருவக்காலத்தையும் கல்லூரி பருவக்காலத்தையும் வைத்து ஜீவா,சமந்தா இருவரும் இணைந்து நடித்த தமிழ் ஹிட் படங்களில் டாபில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் அதிகப் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
அக்டோபர் 2014 ஆம் ஆண்டு ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் முதலில் நடித்தப் படம்.இப்படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமானர்.இப்படத்தில் ‘பக்கம் வந்து,செல்பி புல்ல,ஆத்தி’போன்றப் பாடல்கள் அப்போதையக் காலத்தில் நல்ல டிரெண்டிங் பாடலில் இடம்பெற்றுள்ளது.
‘பத்து எண்றதுக்குள்ள’ விக்ரம் ஜோடியாக சமந்தா இரு வேடத்தில் நடித்திருந்தார்.இப்படம் திரையுலகில் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்று வந்தது. இப்படத்தில் ‘ஆனாலும் இந்த,பத்து எண்றதுகுள்ள’ஆகியப் பாடல்கள் இப்படத்தின் ஹிட் பாடல்கள்.
ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு ‘தெறி’விஜய்யுடன் மீண்டும் இணைந்து சமந்தா நடித்திருந்தார்.இதில் சமந்தா விஜய் மனைவியாக நடித்திருந்தார். ‘என் ஜீவன்,ஜித்து ஜில்லாடி,ஈனா மீனா டீகா’ஆகியப் பாடல்கள் விஜய் சமந்தாவின் டாப் ஹிட் பாடல்கள்.
2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான ‘மெர்சல்’விஜய் நடிப்பில் சமந்தா ஜோடியாக நடித்த டாப் ஹிட் படம்.இது தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பைப்பெற்றது.இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது.
2018ல் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்த முதல் படம் ‘இரும்புத்திறை’இப்படம் விஷாலையும் சமந்தாவையும் ஒருத்திறையில் வைத்து பார்க்கும்போது நல்ல காதல் ஜோடியாக இருந்தது.இப்படத்தில் ‘முதல் முறை, யார் இவன்,’முதலியப் பாடல்கள் மக்களிடம் வரவேற்பைப்பெற்றது.