திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்! பிரபல நடிகை அறிவிப்பால் அதிர்ச்சி!
![sheela rajkumar ஷீலா ராஜ்குமார்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/12/02/343802-sheelarajkumar-1.jpg?im=FitAndFill=(500,286))
2016 ஆம் ஆறாது சினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். பின்பு அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
![sheela rajkumar ஷீலா ராஜ்குமார்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/12/02/343801-sheelarajkumar-4.jpg?im=FitAndFill=(500,286))
தமிழ் தவிர மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ் மகள் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.
![sheela rajkumar ஷீலா ராஜ்குமார்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/12/02/343799-sheela.jpg?im=FitAndFill=(500,286))
பின்பு மோகன் ஜி இயக்கிய திரௌபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு நடுக்கடலில் சோழன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ஷீலா.
இவர் நடித்து இருந்த மண்டேலா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பிறகு, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தற்போது திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன் என்று ஷீலா ராஜ்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சினிமா வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது.