Shriya Saran : 41 வயதிலும் ‘நச்’ சிரிப்பால் சுண்டியிழுக்கும் ஸ்ரேயா சரண்! கலக்கலான புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். இவருக்கு தற்போது 41 வயதாகிறது.
ஸ்ரேயா, 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இஷ்டம்’ என்ற படம் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படமான, சந்தோஷம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்தது. இதிலிருந்து ஸ்ரேயாவின் மார்கெட் உயர ஆரம்பித்தது.
ஸ்ரேயா, முதன் முதலில் நடித்த தமிழ் படம், ‘எனக்கு 20 உனக்கு 18’. இந்த படத்தில் அவர் கதாநாயகனுக்கு தோழியாக நடித்திருப்பார்.
ஸ்ரேயா நடிப்பில் வெளியான மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றன.
ஒரு கட்டத்தில் ஸ்ரேயா நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்க ஆரம்பித்தன. இதனால் இவரை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களில் கமிட் செய்யமால் இருந்தனர். அப்போது, தமிழ் திரையுலகின் ஒரு பிரபல நடிகர்தான் இவரை தன் படங்களில் நடிக்க வைத்ததாக குறப்படுகிறது.
ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ஸ்ரேயாவிற்கு தற்போது 41 வயதாகிறது. ஆனால், இந்த வயதிலும் அவர் தனது வசீகர சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போடுவதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஸ்ரேயாவின் தற்போதைய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.