இளமை துள்ளும் புன்னைகையோடு புன்னகையரசி சினேகா!
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென திரையுலகில் ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா.
இவர் தமிழில் 2001-ல் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தனது திறமையான நடிப்பாலும், குடும்பப்பாங்கான அழகிய தோற்றத்தாலும், புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று தொடர்ந்து ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருந்து வருகிறார்.
இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான போதிலும் இன்னும் அதே இளமை ததும்பலோடு பல ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை அவ்வப்போது ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் பாவாடை தாவணி அணிந்து ஹோம்லி லுக்கில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.