கொஞ்சம் ஸ்டைலிஷ்..கொஞ்சம் கிளாமர்..! சுஜா வருணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Mon, 03 Jan 2022-9:00 pm,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் வீட்டு மருமகள் நடிகை சுஜா வருணி. தமிழில் வாத்தியார், பிளஸ் 2 சிங்க்குட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு, தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். சிங்கக்குட்டி படத்தில் நடித்தபோது இவருக்கும், ராம்குமாரின் மகன் சிவாஜி தேவுக்கும் இடையே காதல் மலர்ந்தது

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதனால், 2018 ஆம் ஆண்டு சென்னையில் சுஜா வருணிக்கும் - சிவாஜி தேவுக்கும் திருமணம் நடைபெற்றது

குழந்தை பிறந்த பிறகு குண்டாக இருந்த சுஜா வருணி, உடற்பயிற்சி மூலம் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இப்போது கோல்டன் கலர் காஸ்டியூமில் கொஞ்சம் ஸ்டைல், கொஞ்சம் கிளாமர் என சூப்பரான ஃபோட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link