அழகு த்ரிஷாவின் அன்சீன் புகைப்படங்கள்! செம க்ளாமரா இருக்காங்களே..
மிஸ் சென்னை பட்டம் வாங்கி, மாடலிங் துறைக்குள் நுழைந்து பின்பு சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா.
‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக வந்த இவர், திரைக்கு வந்த சில நாட்களிலேயே முன்னணி நடிகைகளுடன் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது, அவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
த்ரிஷா, தமிழில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் இவர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
நடிகை த்ரிஷாவிற்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஆனால், இது குறித்து பேசும் அவர் சரியான ஆள் கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்ள தயார் என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதையடுத்து, அவரை தேடி பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
த்ரிஷாவின் பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் இன்னும் அதே இளமையும் அழகும் குறையாமல் இருக்கிறாரே த்ரிஷா என கமெண்ட் செய்து வருகின்றனர்.