பிறந்தநாள் பரிசாக வெளியான திரிஷாவின் புதிய பட அப்டேட்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா 39 வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இதனையொட்டி, குடும்பத்துடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார்.
நிறைய படங்களை கைவசம் வைத்திருந்தாலும், அவர் நடித்த படங்கள் ரிலீஸாகாமல் சிக்கலில் உள்ளன. கர்ஜனை, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மணி ரத்னம் இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.
லேட்டஸ்டாக, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ’தி ரோட்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
புதுமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்குகிறார்.