வித்தியாசமான முறையில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி!

Wed, 01 Jan 2025-8:03 am,

இன்று ஜனவரி 1ம் தேதி உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. புது ஆண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.

புத்தாண்டு தினம் விடுமுறை நாள் என்பதால் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக விசேஷ நாட்களில் முக்கிய பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த புத்தாண்டுக்கு ரஜினியின் வாழ்த்து சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது.

"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

இதுக்கு முன்னர் நடிகர் ரஜினி இதுபோன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதே இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏன் இப்படி பதிவிட்டுள்ளார் என்று குழப்பத்தில் உள்ளனர்.

 

யாரையும் குறிப்பிட்டு இவ்வாறு பதிவிட்டு உள்ளாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கிறதா? என்று மக்களும் குழம்பி உள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link