செரிமானப் பிரச்சனையா, அஜீரணக் கோளாறா? வாரம் ஒரு முறை சாப்பிட வேண்டிய உணவுகள்
தவறான உணவு உண்பதால் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. அந்த பிரச்சனைகளில் ஒன்று அஜீரண பிரச்சனை. உண்ணும் உணவு சரியாக செரிக்காவிட்டால், அது நமது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது உணவில் நார்ச்சத்து நிறைந்த பொருட்களைச் சேர்த்தால், அது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நார்ச்சத்து உள்ள உணவுகள், மலக்குடல் பிரச்சனை முதல் சர்க்கரை நோய் வரை பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாகும்.
புரோபயாடிக்குகள் கொண்ட தயிர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் நட்பு பாக்டீரியாக்களைக் கொண்டது. தயிர் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்குவது மட்டுமின்றி, வயிற்றுக்குக் குளிர்ச்சியைத் தருவதற்கும் தயிர் உதவும்.
கீரையையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீரையில் நிறைய நார்ச்சத்து உள்ளது. செரிமானத்தை மேம்படுத்துவதோடு, அஜீரண பிரச்சனையை நீக்கவும் பயனுள்ளதாக இருக்கும்
அஜீரண பிரச்சனையை நீக்க ஆரஞ்சு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது அஜீரணத்தை நீக்குவது மட்டுமல்லாமல், தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால், அது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக மாற்றும்.
அஜீரணம் ஏற்பட்டால், உங்கள் உணவில் எலுமிச்சை சேர்க்கலாம். எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதனுள் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தும்
பலாப் பழத்தின் சுவை பலருக்கும் பிடித்திருக்கும், ஆனால், பலா பழுக்காமல் காயாக இருக்கும்போது, அதை சமைத்து உண்பது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும். அதில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்
உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பசுமையான இலை கொண்ட கீரைகளை சேர்த்துக் கொள்வது நல்லது