12 ஆண்டு.. மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம்
குரு பெயர்ச்சி 2023: 12 வருடங்களுக்குப் பிறகு குரு பகவான் மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த பெயர்ச்சி 22 ஏப்ரல் 2023 அன்று நடக்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதன் சுப பலன் பல ராசிகளில் தென்படும். குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.
குரு பார்வை: குருவின் பார்வை ஒருவர் மீது விழுந்தால், அந்த நபர் வாழ்வில் சகல ஐஷ்வர்யங்களையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.
மேஷ ராசி: உங்கள் பணியிடத்தில் சக்தி அதிகரிக்கும். அதே சமயம் வாழ்க்கைத்துணையுடனான உறவில் பலம் ஏற்படும். பதவி உயர்வு, முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக அமையும். பொருளாதார ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம் ராசி: மீன ராசிக்காரர்களின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். திடீர் பண பலன்களைப் பெறுவீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.